முகநூல் முன்னோடிகள் ......

பெண்ணொருத்தி ஹாய் சொன்னால் ,
விரும்பிடவும் கருத்திடவும்
வழிந்திடவும் மகிழ்ந்திடவும்
வாழ்வுதனை மாய்த்திடவும்
உண்டு இங்கு ஆயிரம்பேர்
அவ்வாயிரமும் ஆண்மகன் பேர் !

உணவுமுதல் உறக்கம்வரை
அதிலவளும் பதிவிடுவாள்
பதிலும்பல பெற்றிடுவாள் !
அதனினிலே ஒருபதிலும்
பெண்மகளின் பதிலுமல்ல - நான்
கண்டதிலே அவையனைத்தும்
எனதருமை ஆண்மகனே !

அன்பான ஆண்மகனே !
ஆயிரம் நல்விடயம்
பதிவு செய்ய ஆளுமுண்டு
பலவிடயம் தானுமுண்டு
கருத்திட உன்மனதில்
இடமிங்கே ஏன் இல்லை ?

உடலூனம் கொண்டபின்னும்
உயர்ந்தோர்கள் பலருமுண்டு :
தளராத் தன் நம்பிக்கையால்
தரணிவென்ற தலைவருண்டு :
தமிழர் மரபுதனை
பறைசாற்றும் தகவலுண்டு .

உயிரை அடகுவைத்து
உலகுதனை காத்தவரும் ,
உரிமை வேண்டிநின்று
உயிரினையே மாய்த்தவரும் ,
பலரின் படங்களுண்டு
அவர்கள்த்தம் புகளுமுண்டு.
அதிலே கருத்து தர
உன்கைகள் வலித்ததுவோ ?

காதல் பாடுகளும்
காமலீலை ஏடுகளும்
மேன்மை என்றுணர்ந்து - நம்
மாண்புதனை மறந்தாயோ ?
அயல்தேசம் விட்டுவந்த
அன்னை தெரசா போன்ற
அன்பான அன்னைதனை
அறிந்துகொள்ள மறுத்தாயோ ?

பண்பான பெண்மகளே !
உனக்குமிங்கு தகவலுண்டு.
உடலினை உரித்துக்காட்ட
உன்முகப்படம் ஒன்றுபோதும்.
கண்ணால் கற்பழிக்கும்
கயவர்பல வாழும் பூமி ,
கண்டபின் ஒதுங்கி என்ன ?
கருத்தாய் புரிந்து நட...

புகைப்படம் பதிவிடும் முன்
புரிந்து நீயும் விழித்துவிடு ,
புகைப்படத்தில் புதுமைசெய்யும்
புண்ணியவான் வழும்பூமி .
நல்லதொரு ஆண்மகனும்
நட்புவட்டம் கண்டுதரும் ,

நல்லதை தெரிவு செய்ய
நான்குமுறை சிந்தனை செய் .
புதுமைப் பெண்ணென்று
புதைகுழியில் சிக்கிடாதே !
முகமறியா ஆண்மகனை
முழுதாக நம்பிடாதே .

உண்ணுவதும் உடுத்துவதும்
உனக்கறிந்தால் போதாதா ?
உலகறிய சொல்வதனால்
விருதுகளா தேடிவரும் ?
நாகரீகம் என்று சொல்லி
நல்லொழுக்கம் மறந்தீர்கள் ,
கண்ணகியாய் வாழ வேண்டாம்
கற்ப்பை காத்து வாழ்ந்துவிடு......

மேல்நாட்டு நாகரீகம்
மேன்மையல்ல எந்நாளும் ,
தமிழில் இல்லா நாகரீகம்
துணைமொழியும் தந்திடுமா ?
தாயை மதிக்க தெரிந்தோனே
தாய்நாட்டை மதித்திடுவான் ,
தறிகெட்ட மாந்தர்களே
தன்னைத்தானே மிதித்திடுவார் ........................

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ..... (24-Jul-12, 4:20 pm)
பார்வை : 330

மேலே