கண்ணீரில் எழுதிய வரிகள்
காதல் புரிந்தவன்
கவிதை எழுதினான்
கவிஞன் ஆனான்
கவிஞன் புத்தகம்
வண்ணன வண்ண
அட்டையுடன்
அழகாய் சிரித்தது
கடை வீதிகளில்
நிறங்களில்
சேலை அணிந்து
காதலியும் கைகோர்த்து
நடந்தாள் கடை வீதியினில்
இன்னொருவனுடன்
எனக்காக அவன் எழுதிய
வரிகள் என்று
அவளும் வாங்கிச் சென்றாள்
காவிரியாய் பெருகியது கண்ணீர்
கவிஞனின் கண்களில்
ஆயிரமாயிரமாய் எழுதினான்
கண்ணீரில் நனைந்த வரிகள்
புத்தகம் புத்தகமாய் வந்தது
ஆஹா ஓஹோ என்று
வாங்கிச் சென்றனர் மனிதர்
அவளும் ஒரு புத்தகம் வாங்கினாள்
விலை கொடுத்து
அட்டைக்கப்பால் புத்தகத்தின் பக்கத்தைப்
புரட்டினாள்
அந்த ஆரம்பக் கவிதை :
எந்தன் வரிகளில்
சிந்தும் ரத்தத் துளிகளின்
விலை என்ன தெரியுமா
உனக்கு
என் காதலியே
உடைந்தாள் உள்ளே நொறுங்கினாள்
கண்ணீருடன் அவன் முகவரி தேடி
ஓடினாள்
----கவின் சாரலன்