இரண்டாம் முத்தத்தின் இன்பவிழா!

ஒவ்வொரு நாளும்
உன் மீதான
அதீத காதலும்,
அரக்க கோபமும்,
ஆண்மையில்லா
சந்தேகமும்
என்னிடமிருந்து
நீங்காமலேயே
இருக்கும்,
நீ கொடுக்கும்
அந்த அதிர்ச்சி
முத்தத்திற்கு
முன்பு வரை!
எப்படியாவது என்னை
ஒன்று சேர்த்து
உன்னை ஆரத்தழுவ
நினைக்கும் முன்பே
என்னை வந்தடைகிறது
உன் இரண்டாம் முத்தத்தின்
இன்பவிழா!

எழுதியவர் : பரதன் (4-Oct-10, 4:36 pm)
சேர்த்தது : yogibarathan
பார்வை : 428

மேலே