தொழிலாளி
வறண்ட குரலில்
ராகமில்லா ராகத்தில் பாடும்
இரயில் பிச்சைகாரியின் பாடல்
இரயிலின் கூவலை விட
அதிகமாக இரைகின்றது.....
சில கரங்கள் நீள்கின்ற்ன....
சில சிரங்கள் வேறு திசை காண்கின்றன....
சில இதழ்கள் முனுமுனுக்கின்றன...
ஏதும் புரியாமல் கையேந்தி,
தத்தி தடுமாறி வருகிறது
அவளுடையதாக கருதப்படும்
குழந்தை எனும் தொழிலாளி....