ஓட்டை (பேருந்தில் மட்டும் இல்லை)....

லஞ்சம் எனும் ஆயுதம் கொண்டு
துளையிட்டு உள்நுழைந்தான் அரசுப்பணியில்
இவன் லஞ்சம் வாங்க...........
லஞ்சம் என்ற போதையில் இருக்கும்
ஓட்டையை பார்க்க மறந்து
அனுமதிக்கொடுத்தான்.. லஞ்சம்
வாங்க கூடாது என்று கற்றுக்கொடுக்கும் பள்ளிநிர்வாகத்திடமிருந்தே பணம் வாங்கி...
பச்சிளம் குழந்தைகள் செல்லும் பேருந்திற்கு...
ஒருஅறியா குழந்தையின் உயிர்போனது
ஓட்டை வழியே காட்டை நோக்கி
இவர்களின் அலச்சிய போக்கால்......

இன்னும் கூட திருந்தப்போவதில்லை
இந்த பணப்பேய்கள்....

"இந்தியன் தாத்தா என்ற ஒரு கற்பனை ஜீவன்
நிஜமாகவே பிறந்திருந்தாலும் "

எழுதியவர் : Golden Prabhuraj (28-Jul-12, 12:05 pm)
பார்வை : 159

மேலே