தன்னிகரில்லா தமிழரின் சிறப்பு..
திகட்டாத தேன்சுவை கவிப்புலமையும் ...
திசையெட்டும் தென்றலாய் ...
தவழ்ந்த கலைப்புலமையும் ..
தன்னுள் களங்கமில்லா நெறியும் ....
தரம்தாழா கண்ணியமும் .....
தலைதாழா தன்மானமும் .
தாழ்பனிந்து உபசரிக்கும் பண்பும்...
தளராத வீரத்தால் அகிலத்தை ...
தன்வசமாக்கிய தீரமும்....
தன்னினும் கொடையிற்ச் சிறந்தவர்...
தரணியில் எவருமில்லை எனும் ..
தலையங்க வரலாற்றையும் ...
தனதாக்கிய பெருமை ....
தன்னிகரில்லா தமிழனுக்கே...!!!
தமிழனாய் பிறப்பதைவிட ...
தவமான வரம் ஏதும் உண்டோ ...?..நாம்
தமிழர் எனும் இனமான உணர்வுகொள்வோம் ..!!!
தமிழ்த்தேசியத்தின் பெருமைகாப்போம் ...!!!