என் தோழியான மழை
![](https://eluthu.com/images/loading.gif)
நான் அவனுக்காக காத்து
கொண்டிருந்தேன்.....
ஒரு மணி நேரம்
கழிந்தது......
யாரோ ஒருவர்
6 மணி ஆகிவிட்டது
என்று கூறி கொண்டு சென்றார்....
அவன் இன்னும் வரவில்லை....
ஏன் நிழல் கூட பொறுமை
இழந்து என்னை விட்டு
சென்று விட்டது....
திடீர் என்று ஏன் தோழி வந்தாள்....
அவள் பேச்சில் நான் நனைந்தேன்....
அவள் என்னோடு புகைப்படம்
எடுத்து கொண்டாள்.......
என் கல்யாணத்திற்கு வர முடியாது
என்று மன்னிப்பு பெற்று கொண்டாள்....
மேள சப்தத்தை எனக்கு பரிசளித்தாள்.....
என்னை யாரோ அழைப்பது போல்
தெரிந்தது.....திரும்பினேன்...அவன் தான்....
அவனிடம் நடந்ததை கூறினேன்....
எங்கே உன் தோழி என்று கேட்டான்...
அவள் என்னை நனைத்து.....
மணலில் கலந்து....தரையோடு
சென்றுவிட்டாள் என்றேன்...