பிரிவு

பள்ளி வாசலில்
மாங்காய் தின்னுவாய் நீ..

அந்த மாங்காய்க்கு
என் நாவிலும் எச்சில் ஊரும் ...
கேட்டாலும் தரமாட்டாய் ...
பிடுங்கி தின்றால் அழுதுவிடுவாய்
பிடுங்க மனமில்லாமல் விட்டு செல்வேன் ...

விவரமில்லா வயதில்
பிறந்தது உன் நட்பு ...
விளையாட்டாக பேசினோம் ..
விளையாட்டை மட்டுமே பேசினோம்...

குறும்புக்கு பெயர் போனவன் நீ ...
எனக்கும் சேர்த்து நீயே அடி வாங்கினாய் ....
ஆனாலும் என் தேர்வு தாள்களில்
உன் விடைகளே இருந்தன...

முழுக்காற் சட்டை போட்டபோது ..
மாமன் மச்சான் என்று நம்மை நாமே அழைத்துகொண்டோம் ..
கெட்டபழக்கம் அத்தனையையும்
கற்க தொடங்கினோம் ...
என் பெற்றோருக்கு உன்னை பிடிப்பதில்லை ...
என்ன வேடிக்கை ..
நீ என்னை கெடுத்தாயாம்...

பள்ளி முடித்தும்
மைதானத்தில் அரட்டை அடித்தோம் ...
மாலை பயிற்சி வகுப்பு முடிந்தும்
வீடு செல்லலாமல்
தெருக்களில் நின்று கதை பேசினோம்

அப்போதெல்லாம் நம் நட்பின் ஆழம்
தெரியவில்லை

புரிந்தது பிரிவின் வலி
கல்லூரி என்னும் சாலையில்
நாம் வேறு திசைகளில் பயணித்தபோது...!!

எழுதியவர் : ராஜேஷ் (29-Jul-12, 4:25 pm)
Tanglish : pirivu
பார்வை : 347

சிறந்த கவிதைகள்

மேலே