என் நண்பன்

என் நண்பன்


எங்கும் என்னை கேலி செய்தான்...

என் பேச்சுகளை அவமதித்தான்...

நான் பயந்தவன் என தெரிந்தும் பயமுறுத்துவான்..

அவன் விளையாட்டிற்கு என்னை பொம்மையாக்கினான்...

பேச தெரியாமல் பேசி அவனிடம் அடைந்த அவமானங்கள் அதிகம்...

இப்படிபட்ட அவனை பிடிக்குமா?
பிரிந்தேன் பேச கூடாதென்று...

பேச தெரியாமல் பேசுபவன் என்னை விளையாட்டு மைதானத்தில் மற்றவன் தாக்கினான் நான் பேசிய பேச்சிற்க்காக
எனது உதிரம் கொட்டும் அளவிற்க்கு...

சற்று பொழுதில் ரத்தம் அதிகம் கொட்டுகிறது
எனக்கல்ல,
என்னை தாக்கிய அவனுக்கு...

சீறிய சினத்தில் அவனை தாக்கியவன்,
நான் படும் வேதனையை தாங்க முடியாத நான் விட்டு சென்ற

"என் நண்பன்"

எழுதியவர் : ரா.புவனேஷ்வரன் (30-Jul-12, 11:24 am)
Tanglish : en nanban
பார்வை : 418

மேலே