################கன்னியல்ல கள்ளி#################
தனிமைக் கதவின் தாழினை நீக்கி,
இதயம் திருடிச் சென்றவளை
தேடத் தொடங்கும் தருணம்,
காதல் மலரும் தருணம் !!
திருடியை தேடித் தொடரும் பயணம்..!!
அகப்பட்டபின் அகப்படுவான்..!
அப்போது , அதை அறியான்..!!
சுகம் பெற்ற பின் சுமைஎன்பாள்..!!
அப்போதும் , அவன் அறியான்..!!
சூடுபட்ட பின் சுகமென்பான்;
கொண்ட காதலும் மெய்என்பான்!
கள்ளியைத் தேடும் காவலர்கள் பலருண்டு..!
என் கள்ளியைக் கண்டவரும் அதிலுண்டு..!!
கணவான்களெல்லாம் என்போல் நிஜமானதால்,
மூழ்கினோமே..!
கன்னிமட்டும் நிழலானதால் இதமாக மிதக்கிறாளே..!!
நினைக்கையில்,
முத்துமழையும் முத்தமழையும்
முள்ளாகக் குத்திக் கிழிக்க,
மௌன மொழிகள் பேசும் சிறுதுளிகள்..!!;-(
**தயவு செய்து,
உதிருங்கள்
வாடாதீர்கள்**