இன்பமயம்
பின்னோக்கி முன்னோக்கி தன்னோக்கா வாழ்வு,
தடுமாறி தள்ளாடி தலைகீழாய் தவழும்.
தன்நோக்கி தான்னோகி தனிப்படிப்பு தாண்டிய
தன்னிறைவு, தலைமையாய் மகிழும்.
தன்சிறப்பு தானறிந்து தாயுள்ளம் கனியவைத்து
தலைமகளை கைபிடிப்பின், வாழ்வுதான்,
எல்லாம் இன்பமாய்.