விதவை

துணைக்கரம் இன்றி
துன்பத்தில் திளைக்கும்
தனிமரம்
பொட்டு இழப்பு
வண்ண சேலை துறப்பு
மங்கள காலங்களில் புறக்கணிப்பு
விழாக்காலமாகட்டும் ,விருந்துக்காலம் ஆகட்டும்
சட்டமன்ற அமளியாய்
எதிர் கட்சி வெளி நடப்பாய்
நி வெளியேற்றம் .
இளமைக்கால இழப்பெனில்
உனக்கு எத்தனை இடர்பாடு
உன்னுயிர் தந்து
உனதருமை குழவி காப்பாய்
உன்னருமை அறியா
அடுத்த வீ ட்டுக்காரன்
உதவுவதாய்
உத்தரவு இன்றி
உட்புக நினைப்பான்
ஐயோ பாவம் என்பார்
அவள் அருகில் உள்ளபொழுதில்
அகன்றதும்
அவள் செய்த பாவம்
என்போர் ஏராளம் .
அரசுதரும் உதவி ஊதியம்
வீடு செலவிற்கு போதாதுஎன்று
வீட்டு வேலைக்கு சென்றாலும்
முதலாளி கண்களால்
கற்பழிப்பான் .
இல்லற இளமை தம்பதிகளை
நோக்கும் பொழுதினில்
நோகும் அவளது முகம்
ஏங்கும்அவளது அகம்
தந்தை எங்கேயென
தன்குழந்தை கேள்விக்கணை
தொடுக்கும் தருணத்தில்
வாய் பேசுவதற்குள்
கலங்கிய கண்கள் பேசும்
முதல் வார்த்தைகளை
என்னவென்பேன்
என்னை ஏமாற்றிய இறைவனை





இளையகவி

எழுதியவர் : இளையராஜா.பரமக்குடி (30-Jul-12, 2:58 pm)
பார்வை : 304

மேலே