மின்துண்டிப்பு

தலைப்பு செய்திகள்
மின்துண்டிப்பு
எதிர்கட்சிகாரன் அல்ல.....................
ஏமார்ந்தவன்
உங்களால் ஏமாற்ற பட்டவன்
கற்காலத்தை
கண்முன் நிறுத்தும்
இருள் .

அம்மா சுட்ட இட்டிலிக்கு
சட்டினி அரைக்கும் தருணத்தில்
பாசக்கயிறால் உயிர் பறிப்பென
பாவி பய பிடுங்கி விட்டானென
ஒரே புலம்பல் .

அம்மா அழகாய் சுட்ட
ஆம்பிலட்டை
ஆளுக்கொன்று அம்மா அடுக்க
ஆசையால் அள்ளிதின்னும்
அவ்னொடியே
அருகே அமர்ந்த கரம்
என் தட்டில் கரம் பதித்து
ருசி பார்த்தது
மின்களவால்.


அக்கா அழகு குறிப்பறிய
தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்தாள்
அதிர்ச்சியாய்
தொலைக்காட்சி பெட்டியில் அவள் முகம்
வர்ணனையாளர் வருவதற்குள்
வாக்கருசி போட்டன்
மின்சார திருடன் .



அலுவலக பணியால்
அயர்ந்துறங்கும்
தந்தைக்கு
மின்விசிறி இசையே ரீங்காரம்
இவ்னொடியே
கொசுவின் இரைச்சலால்
கொடுக்கோல் ஆட்சி -மின்சாரம் இம்மையால் .

நாடக தொடர் நோக்கி
ஒரு கூட்டம்
நடுவீட்டில் உட்கார்ந்து
ஒப்பாரி ........
தன்வாழ்க்கை மறந்து
துளசி வாழ்க்கை பற்றி
இருளில் வாக்குவாதம் .

மட்டைபந்து ஆர்வளர்
ரன் ஓட்டம் அறிய
அவர்கள் ஓடிய ஓட்டத்திற்கு அளவில்லை
எங்கு சென்றாலும் ஒரே பல்லவி
மின்துண்டிப்பு என
இந்திய அணி தோல்விபோல்
அவர்களது உழைப்பும்
தோல்வியில் .

மின்தடையால் ........................
முதல் மாணாக்கருக்கு -முன்னேற்ற தடை
இடை மாணாக்கருக்கு -வாழ்க்கை இழப்பு
கடை மாணாக்கருக்கு -வசந்த காலம்
அப்பொழுது அவர்களுக்கு .

ஏசியில் உள்ளவரையும்
விட்டுவிட வில்லை
ஏமாற்றியது மின்சாரம் .

மின்தட்டுப்பாடு அகற்று
போர்க்கொடி ஏந்திய ஒரு கூட்டம்
சுவர் நிரப்பும்
சுவரெட்டிகளோடு
மறுக் கூட்டம்
முற்றுகை இட்டாலும்
செவிசாய்க்கா முதுமக்கள்
குடிமக்கள் நிலை உணராதது ஏனோ? .





இளையகவி

எழுதியவர் : இளையராஜா.பரமக்குடி (30-Jul-12, 2:55 pm)
பார்வை : 245

மேலே