தூரத்து வெளிச்சம்...!
மனதில் கோடி ஆசைகளுடன்
மணந்தவன் வருகைக்காக காத்திருந்தேன்!
மல்லிகை வாசத்துடன் வருவான் என நினைத்திருந்தேன்
மதுவின் வாசத்தோடு வந்தான்!
மனதின் ஆசைகளுக்கு கொள்ளி வைத்தான்
மனைவி என்ற உரிமையில் என்னை தின்று விட்டான்!
தாயின் வீட்டில் நான் செல்லப் பிள்ளை
தாரமான வீட்டில் நான் செல்லாப் பிள்ளை!
கடும் பசிக்கு கைவளையல் போச்சி
கடன்காரர்களுக்கு கம்மல் போச்சி!
பட்டினியாய் நான் இருந்தாலும்
பாவி அவனுக்கு பாட்டிலுக்கு பஞ்சம் இல்லை!
மதுவோடு மங்கையின் வாசமும் சேர்ந்து வரும்
மடந்தை என் தாய்வீட்டின் ஏழ்மை நிழலாடும்!
பசியை மட்டுமே அறிந்த என் வயிறும்
பாசத்தை உணர ஆரம்பித்துள்ளது!
நம்பிக்கை துளிர்விட்டது
நல்ல வாழ்கை கிடைக்கும் என்று.....!