தாய்

எனக்காக பிறந்தவள் -என் தாய் .......
எனக்காக வாழ்பவள் -என் தாய் .....
ஒரு நொடியும் பிரிந்ததில்லை -உன்னை ..
ஒரு பொழுதும் மறந்ததில்லை -உன்னை ..


பள்ளி பருவத்தில் ..
அன்புடன் தலை வாரி விட்ட அழகிய விரல்கள் .......
சாப்பிட மறுத்து குறும்பு செய்யும் பொழுது
அன்பாய் அதட்டும் இதழ்கள் ...
பரீட்சை பயத்தில்..
நான் சாய்ந்து கொண்ட உன் தோள்கள் ..
எனக்காக பாசம் பொழியும்
உன் கண்கள் ..

எப்படி நான் உன்னை விட்டு பிரிந்தேன் ..
ஏன் நான் உன்னை விட்டு பிரிந்தேன் ?..
நான் பெற்ற மதிப்பெண்களை வெறுக்கிறேன் ..
என்னை உன்னிடமிருந்து பிரித்தது -அது தானே ...

கல்லூரி விடுதியில்...
தோழிகளின் ஆறுதல் மொழிகள் ..
உன் அன்பை நினைவு படுத்த ...
தலையனையை உன் மடி என எண்ணி ...
ஆறுதல் அடைகிறேன் ...

சனிக்கிழமை வகுப்புக்கள் ...
சிறை தண்டனை ...
விடுமுறை எப்போது என எண்ணியே ....
கழிகிறது அந்த ஏழு நாட்கள் ...


உடல் நலக்குறைவால்
மருத்துவமனையில் ,அப்பா இருக்க ..
அவரை பார்க்க முடியாமல் -
பூட்டிய கதவுகளின் விரிசலில்
அப்பாவின் முகத்தை நீ தேட...
அழுகவும் முடியாமல் ,ஆறுதல் சொல்லவும் முடியாமல்..
எங்கோ தொலைதூரத்தில் நான் இருக்கிறேன் ...


படித்தது போதும் ...
அப்பாவுடனே நான் இருக்கிறேன் என்ற எனக்கு ...
நம்பிக்கை கொடுத்தாய் -நீ ..


உன்னை போல் யாரும் இல்லை ...
யாரும் உன்னை போல் இல்லை ....


நான் கற்கும் பாடம் ..
என்னை வாழ்க்கையில் உயர்த்தும் ...
நீ -கற்றுக்கொடுத்த பாடம் ..
என் வாழ்க்கையை எனக்கு உணர்த்தும் ....

காத்திருக்கிறேன் உன் சிரித்த முகத்தையும்
அப்பாவின் அன்பு வார்த்தைகளையும் எனதாக்கிகொள்ள ....

எழுதியவர் : சுபாஷினி.mpsi (1-Aug-12, 6:26 pm)
Tanglish : thaay
பார்வை : 373

மேலே