காதல் ஓவியம் ! காதல் பூக்கள் !
உனை எண்ணி எண்ணி
இருந்த இரவுகளில் -நட்சத்திரங்களை
எண்ணி எண்ணி முடித்திருக்கலாம் !
தலையணை என்னைக் காதலித்தது !
உனை எண்ணி நான் கொஞ்சிய
மொழி கேட்டு !
அதிக முத்தம் கொடுத்தவர்களில்
முதலிடம் எனக்கு !
நம்பவில்லையேல்
என் தலையனைக் கேட்டுப்பார் !
உனக்களிக்க ரோஜா கொண்டு வந்தேன் !
அதுவும் முகம் வாடியதே !
உன்னழகைக் கண்டு !
கண்ட இடங்களில் உன் பெயரைக் கிறுக்குவேன் !
ஆம்!
நான் ஒரு "காதல் கிறுக்கன்"!
இசை கேட்பதில் எனக்கு விருப்பம் அதிகம் !
ஆம்!
உன் குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது !
அன்பே !
நீ பூ சூடாதே !
உன் மணத்தில் பூ மணம் இழந்து விடுகிறது !
இரவும் பகலும் நீ என்னை
வதைப்பது நியாமா..!
ஐயோ!இது தான் காதல் காயமா..?
தயவுசெய்து உன் பார்வையை
என்மீது பதித்து விடு !
உன் பார்வை பட்ட இடமெல்லாம்
"புண்ணியமே" !
கண்ணே !
கண்ணீர் கூட தித்திக்கிறதே !
உனக்காக வருவதனால் !
அழகே !
நீ என்ன மந்திரவாதியா ..?
தோன்றித்தோன்றி மறைகிறாயே..!
சுவாசமே !
தனியாக சிரிக்கிறேன் !
உன்மேல் உள்ள "பைத்தியத்தினால்" !
மனிதனாகப் பிறந்ததற்கு "பூவாக"
பிறந்திருக்கலாம் !
உன் கூந்தலில் ஒரு நாளாவது வாழும்
பாக்கியம் கிடைத்திருக்கும் !
ராமன் தேடிய சீதை !
கிருஷ்ணன் தேடிய ராதை !
கண்ணன் தேடிய கோதை !
நான் தேடிய "நீ" !
திருடி !
என் மனத்தைக் கொடுத்துவிடு !
அழகே !
தமிழில் "பேரழகு" என்ற சொல்லை நீக்கிவிட்டு
"உன் பெயரை " சேர்த்துவிடலாமா..?
உன் இதழில் தேன் இருப்பது தெரியாமல்
எங்கெங்கோ அலையும் "வண்டுகள்" !
என்னுடைய காதலிக்கு சமர்பிக்கிறேன் !
உயிரே! நான் உன்னை காதலிக்கிறேன் ..!
இக்கவிதைகள் எல்லாம் அவளை நினைத்து அவ்வப்போது எழுதியவை !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
