கூடங்குளம் -கடைசி கண்ணீர் துளிகளுடன் இந்தியன்
இக்கவிதை
அணுவை பிளந்து எழு கடல்
புகத்தி குறுக தரித்த திருக்குறள்களை
பற்றியதல்ல....
ஏழு கோடி மக்களின் இதயம் துளைத்து
யுரேனியம் நிரப்பி
உலக உறண்டையை உடைக்க பார்க்கும்
உண்மைகளை பற்றியது...
இந்தியா
அன்பாளும் அறிவாளும்
அழகாய் அமைய பெற்ற
எழில் மிகு நாடு
நேசக்கரம் கொண்டு கேட்போருக்கெல்லாம்
பாசக்கரம் கொடுத்த நாடு....
கிணறு வெட்ட பூதம்
தோன்றிய கதைகள்
இந்தியாவில் தான் அதிகம் ...
அணு நீர் மூழ்கி கப்பல்கல்கள்
அமைக்க போய்
அணு ஆயுத பூதாகரமாய்
வெடிக்க இருப்பதும்
இந்தியாவில் தான்...
எங்களின் தேசம் என்ன
ரஷ்யர்களின்
விளையாட்டு திடலா???
ஒத்திகை பார்க்க
எங்கள் நாடும் நாடு மக்களும்
நாடக மேடைகள் அல்ல...
5KM எல்லைக்குள்
ஒரு லெட்சம் மனித விருச்சங்களுக்கு
ஒட்டு மொத்தமாய்
கண்ணமா பேட்டை அமைக்கும்
உரிமைகள் உனக்கல்ல...
போதும் போதும்
லிட்டில் பாய்
காற்றில் பரப்பி
கண்கள் எட்டும் தூரம் வரை
காற்றுக்கும் கரைபடிய வைத்த
துகள்கள் இன்றும்
ஜப்பானில் மறையவில்லை ....
மின்சாரம் தயாரிக்க
ஆயிரம் வழிகள் இருக்க
அணு ஆயுதம் எடுப்பதேன்????
ஆஸ்திரேலியாவிற்கு தெரியும்
உலக அரங்கில்
23 % யுரேனியும் வைத்திருந்தாலும்
நம் நாட்டில்
ஒத்திகை விளையாட்டுகள் வேண்டாம் என்று...
பாவம் இந்தியர்கள்
குறிப்பாய் தமிழர்கள்
இன்னும் குறிப்பாய் நாங்கள்....
அணு உலைகள் வேண்டாம்
அன்பு போதும்...
யுரேனியம் வேண்டாம்
காற்றலை போதும்...
2850 MW மின்சாரம் வேண்டாம்
2000 மீன்கள் போதும்...
நேற்று நடந்தது வரலாறுகள் ஆயின
இன்று நடப்பது வரலாறுகள் ஆகும்
நாளை நம் இந்தியாவின்
கூடங்குலமும்
ஹிரோஷிமா நாகசாகியாடு
வரலாற்றில் சுவடுகளில்
இனையாமிளிருக்க வழி விடுங்கள்
எங்களை வாழ விடுங்கள்
ஏதோ ஒரு மூலையில்
மரம், செடு,கொடிகளோடு
உப்பு காற்றில்
உலாவி கொண்டே
நாங்களும் வாழ்ந்து போகட்டும்...
கடைசி கண்ணீர் துளிகளுடன்
இந்தியன்....