நினைவு கூறல்.

வாசற்படி,தின்னை,என் அன்னைமடி
எப்பொழுதும் நான்
ஞாபகங்களால் தவழ்ந்து விளையாடும்
ஞானமடங்கள்
பூரணமான எனது
புனிதஷ்த்தலங்கள்

காலத்தை திரும்பிப்பார்க்கிறபோது
தென்படும் என் திசைகள்
தன் துணையை பயணமொன்றுக்கு
கையசைத்து வழியனுப்ப முடியாமல் தவிக்கும்
காதலியைப்போல் நானும்

மயிலிறகால் வருடும்
மழலை பருவத்தை
நிகழ்காலத்தில் நினைவுகளில் கூட
மீட்டிப்பார்க்கநேரமின்றி
மின் விசிறியாய் சுழல்கிறேன்

காலம் என்னை
தன் அடுப்பன் கரையின்
அம்மிக்குழவி போலவே ஆக்கிவிட்டது


ரோஷான் ஏ.ஜிப்ரி ,இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி ,இலங்கை. (1-Aug-12, 11:08 pm)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 193

மேலே