தன்னம்பிக்கை

எழுத்து பிழை என்றார் ஒருவர்
சந்தமில்லை என்றார் ஒருவர்
சங்கதி இல்லை என்றார் ஒருவர்
புதுகவிதை என்றார் ஒருவர்
புரியவில்லை என்றார் ஒருவர்
எதுகை சரியில்லை என்றார் ஒருவர்
மோனை முற்றிலுமாய் இல்லையென ஒருவர்
முதல் வரியேய் ரசித்தார் ஒருவர்
முற்றிலுமாய் வெறுத்தார் ஒருவர்
கருத்துலே குறையில்லை என்றார் ஒருவர்
கருத்தே இல்லை என்றார் ஒருவர்
வன்மையாய் கண்டித்தார் ஒருவர்
வரிகள் சாட்டையானது என்றார் ஒருவர்
ஒவ்வொருவரும் ஆனார் நடுவர்
ஓயாமல் எழுதிகொண்டிருக்கும்
ஒருவரின் எழுதுகோல்
இதுவோ தன்னம்பிக்கை .....

எழுதியவர் : Jagadeeshwaran (2-Aug-12, 6:36 pm)
சேர்த்தது : jagadeeshwaran
Tanglish : thannambikkai
பார்வை : 237

மேலே