நட்'பூ'க்காரன் !

காலச்சக்கரத்தை
பின்னோக்கி சுற்றிப்பார்த்தேன்,
மூவைந்து வருடங்களுக்கு பிறகு
சந்திக்க போகும்
நண்பனுடன்
நான் விளையாடி உறவாடிய
நாட்களுடன் நடை போட்டேன் !

என் பேனாவின்
நாக்கு துடிக்கிறது,
அவனை பற்றி நிறைய பேசவே !
கடிகார முட்களுக்கு முன்
நான் ஓட வேண்டிருப்பதால்
முடியாமல் போகிறது !

எதற்கும் அப்பாற்பட்டு
நட்புக்கு மட்டும் உட்பட்டு
அச்சிறு வயதில்
நட்பென்னும் ஆலமரத்தை
விதைத்து விட்டான் !
ஆழமாக வேருன்றிய
மரம் கண்டவன்
பிரசவித்த தாய்
தன் மகனை நாட்கழித்து
பார்த்த பரவசம் அடைகிறான் !
என்னை மறுபடி
இதய கூட்டுக்குள் அடைக்கிறான் !

பண்ட மாற்று முறையை
அய்யனார் குதிரையின்
காலிடுக்கில் அமர்ந்து
கற்பித்தான்
தன் தூக்குச்சட்டியுடன் !

இன்றைய கடைசியாய் ........
இறைவா
எனக்கு கூடுதலாய்
வாழ்நாள் வேண்டாம்,
இவனோடும்
இவன் நட்போடும்
வாழ்ந்துவிட
நான்கே நிமிடங்கள் கொடு !
எனக்காக
எவனையும்
ஏன், எமனையும்
கொல்லத்தயங்க மாட்டான்!

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (3-Aug-12, 6:46 pm)
பார்வை : 355

மேலே