இன்று நட்பு நாள் -2

நட்பு,
இன்ப வாழ்வின்
சந்தோஷ பாட்டு
துன்ப இருட்டினை
விரட்டும் மகிழொளிக் கீற்று
ஒற்றுமையை ஓதிவரும்
ஓங்கார உல்லாச கீதம்
பற்று பற்று என
பற்றவைக்கும் அதிசய தீபம்
சிரம சிலந்திவலை
நம்மைப் பிணைக்கும்போது
உதவியின் பொருள் விளக்கும்
நவீன வேதம்
எவருக்கும் அவர்தம்
வளர்ச்சியின் கண்ணாடி

எழுதியவர் : அகன் (5-Aug-12, 7:47 am)
பார்வை : 181

மேலே