இன்று நட்பு நாள்...

மச்சி ,மாமே,மாப்பிள்ளே,மாம்ஸ்,
கூட்டாளி ,காம்ரேட், தோஸ்து,
"தோன்|" ஹாய்,பிரன்டே,ஆள்ளே,
சிநேகிதா,தோழா,.....
இவையாவும் ஒரு பொருட்பன்மொழி -
உலகளாவிய நன்மொழி -
நண்பன் எனும் இன்மொழி !!!
யோசிக்காமல் நேசிப்பது
நட்பில் மட்டும்தான் -
நேசித்ததை யோசிக்காமல் ,
பாசம் பூசி இ(ற)ருக்கும்வரை
காப்பதும் நட்பில் மட்டுமே!
வயதுரேகையால் வளைக்கப்பட்ட
பூகோள உருண்டை அல்ல நட்பு!
நாலு வேலிக்குள் நட்டுவைத்த
பூமரம் அல்ல நட்பு -
இ(எ)ன்றும் உயிர்த்தெழும் போனிக்ஸ் அது!!

எழுதியவர் : புதுவை காயத்திரி A1B+ (5-Aug-12, 7:36 am)
பார்வை : 193

மேலே