உண்மை விடியல் !
அழகிய இரவு.ஞானி போல் ஒருவன்.தோற்றத்தில் அல்ல !அவனது பேச்சில் !அற்புதமாகப் பேசிக்கொண்டிருந்தான்.அனைவரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
"யாரும் கோபம் கொள்ளாதீர்கள்.கோபம்,பொறாமை,காமம்.
இவையெல்லாம் ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்.
கோபம் கொலைக்கு காரணம்.பொறாமை திருட்டுக்குக் காரணம் .காமம் பாவத்திற்கு காரணம்.",
என உரக்கப் பேசிக்கொண்டிருந்தான்.
ஆங்கிலத்தில் பின்ட்ராப் (pindrop silence) என்பார்களே !அதுபோல ஒரு சிறிய குண்டூசி விழுந்தாலும் ஒலி கேட்கும்.அப்படியொரு அமைதி .
மணி இரவு 9 .அவரவர் தத்தம் இருப்பிடத்திற்கு திரும்ப வேண்டும் .எனவே,ஞானியும் பேச்சை நிறுத்தினார்.அனைவரும் எழுந்து போகவே மனமில்லாமல் கண்ணீருடன் சென்றனர்.நான்கு நாட்களாக நடந்து வந்த இந்த சொற்பொழிவில் ,மூன்று நாட்களாக வராத கண்ணீர் இன்று அனைவருக்கும் வந்தது.
ஞானி சிரிப்புடனே அமர்ந்திருந்தார்."போ"ங்கள் என்றே கூறினார்.அனைவரும் விடைபெற்றனர்.
சிலர் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர் ."இனி நாம் தவறோ,கோபமோ கொள்ளக்கூடாது.ஞானியின் பேச்சு என் மனதை மாற்றிவிட்டது.நான் திருந்திவிட்டேன்",என்றான்.மற்றவர்களும் நாங்களும் திருந்திவிட்டோம்"என்றனர்.
அனைவரும் கண்கலங்கினார்.யாரும் உறங்கவில்லை.நிசப்தம்.பொழுது விடிந்தது.
ஞானியை தூக்குமேடைக்கு அழைத்துச்செல்வதைப் பார்த்து சிறைச்சாலையே கலங்கியது.
என் முதல் சிறுகதை தோழர்களே..!குறை இருந்தால் மனிக்கவும்.!அன்புடன்
கா.பாலமுரளிகிருஷ்ணா