நண்பர்கள் தினம்

களைப்பின் காரணமாய்
நாற்காலியில் சாய்ந்தேன்
காலங்கள் பின்னோக்கி
நகர்ந்தன...
கடந்து சென்ற காலங்கள்
உயிர் பெறுகிறது
நிலைத்து நிற்கும்
நட்பின் நினைவுகளால்
பசுமையான சந்தோசங்கள்
என் எண்ணத்தில் பிரதிபலிக்கிறது.

கள்ளமில்லா புன்னகை ஒலியுடன்
கரம் பிடித்து ஓடிய நட்புகள்
கைகளிலே அதிர்வு
பால்யகால நட்பு
பரந்த மனதுடன்
பகிர்ந்து கொண்டது
நண்பர்கள் தின வாழ்த்தை
மின் அஞ்சலில்
அலைபேசியில் உரையாடல்களுடன்
தொடர்கிறது எங்கள்
பசுமையான நட்பு !

எழுதியவர் : ஹரிணிகார்த்தி (5-Aug-12, 1:40 pm)
Tanglish : nanbargal thinam
பார்வை : 176

மேலே