ஈர மனம்
ஈரமனம் இல்லாத அந்த
மலையாளிகள் - நெறிமுறை
மனம் இல்லாத கொலையாளிகள்
உறவில் ஊறிக்கொண்டே
உருத்துக்கின்றவர்கள்
சொல்லில் சுவையுடன் - பிறர்
சுகத்தைக் கெடுப்பவர்கள் - என்
தலைமகனைத் தழுவிக்கொண்டார்கள்
மாப்பிள்ளையாய்
நான்கு ஆண்டிற்குப்பின்
தந்தார்கள் - மரணப்பிள்ளையாய்
காதல் வலை விரித்தார்கள் - அதில்
என் மகனை வளைத்தார்கள்
எடுபிடிக்காரனாய் வளர்த்தார்கள் - அந்த
எமனுக்கு இறையாக்கினர்கள்
தாலிக்கொடியை மதியாதவர்கள்
தொப்புள் க்கொடிக்கு தீஇட்டார்கள்
தீயில் தலைமகன் எரிந்தான் - பாசத்
தீயில் ஈன்றவர்கள் வெந்தார்கள் -
வெந்த இதயங்களை - அவர்கள்
வேடிக்கைப்பார்த்தார்கள் - அவன்
கேட்டதை வாங்கித்தந்தோம் - எங்கள்
கண்ணெதிரே அவன் கெட்டதைக்கண்டு
தவித்தோம் - அவர்கள் மூலம்
எமன் - என்வீட்டு விலாசத்தில் தவமிருந்தான்
பொழுது விடிவதற்குள் - தலைமகனின் பிறவி
விலாசத்தை சுரண்டிவிட்டான் - பிள்ளையை
வாரிக்கொடுத்தோம் மரணத்தில் - அவன்
வளர்ந்ததை மறவாமல் நினைக்கின்றோம்
இத்தருணத்தில் - ஈன மனம் கொண்டவர்களால்
அவனை ஈன்ற ஈர மனங்களை
சோக எறும்புகள் அரித்தெடுக்கின்றன