அழகு!

பூக்கும் போது
செடி அழகு!
பூத்த உடன் பூ அழகு!
சிந்தும்போது
மழை அழகு!
சிரிக்கின்ற பயிர் அழகு!
செதுக்கும் போது
பாறை அழகு!
செக்கிய பின்னால் சிலை அழகு!
ஊற்றெடுக்கும்
நீர் அழகு!
ஓன்று சேர்ந்தால் நதி அழகு!
கோர்க்கும் போது
சொல் அழகு!
கோர்த்த பின்னால் கவி அழகு!
பார்க்கும் போது
பெண் அழகு!
பழகும் போது நட்பு அழகு!
விடியலும் அழகு!
விடிந்த பின்
தொடங்கும் வாழ்வும் அழகு!
இரவும் அழகு!
இழையும் இனிமையும் அழகு!
உழைப்பும் அழகு!
ஓய்வும் அழகு!
உண்மையும் அழகு!
உறங்கும் பொய்யும் அழகு!
அழகு என்பது..
ஆன்மாவின் தேடல்!
தேடினால் காணலாம் ..
தினம் தினம் ரசிக்கலாம்!