துடிப்பு - இனிப்பு !

கன்னத்தில் காய்ந்து போனாலும்
உன் உதட்டின் இரேகைகள்
இன்னும் என் நெஞ்சில்
ஈரமாய் இருகின்றது...!

எனக்கு
முதுகுக்கு பின்னால்
பேசுபவர்களை பிடிக்காது - ஆனால்
நீ என்
முதுகுக்கு பின்னால்
முணுமுணுத்த வார்த்தைகள்
இன்னும் என் காதுக்குள்
இனித்துக்கொண்டே இருகின்றது...!

கேட்காமல் கிடைத்த
முத்தங்களை விட
கேட்டும் கிடைகாத
முத்தங்களுக்காக
என் கன்னம் இன்றும் கூட
காத்துகிடக்கின்றது...!

என்னைக் கண்டதும்
நிறுத்திக்கொள்ளும்
உன் சங்கீத சிணுங்கல்களுக்கு
என் இதயம் இன்றும்
மெட்டு தேடி கொண்டிருகின்றது...!

எழுதியவர் : கே.எஸ்.கலை (6-Aug-12, 7:13 pm)
பார்வை : 248

மேலே