" நாசமா போச்சு என் காதல் "

பாவி பெண்ணே...!
பாரு என்ன...!
பாடுறேன் ஒரு பாட்டு..,
என் ஒட்டு மொத்த ஏக்கத்த போட்டு..,

பார்க்காத என் நட்பு கூட
உருகுது என் சோகத்த கேட்டு...!

எவ்வளவு தொல்லை செய்தாலும்
உன்னை வெறுக்கும் எண்ணம்
எனக்கு எப்பவும் வந்ததில்ல..,

அளவில்லா தொல்லை செய்தும்
என் இதயத்தை கொல்லச் செய்தும்
அப்பவும் என் மனம் நொந்ததில்ல..!

எனக்கு பிடித்த சென்னையும்
என்னை பிடித்த உன்னையும்
ஓயாம சுத்தியாச்சு...,

கொடுக்க இனி ஏதுமில்ல
என் அன்பு கூட வத்திபோச்சு...!

என் இதய கதவை திறந்துவிட்டு,
ஏணிப்படியில் ஏற்றும் முன்னே
ஏன் இப்படி பிரிந்தாய் என்னை..!

உன்பால் கொண்ட அன்பால்
நீ குட்ட குட்ட குனிஞ்சு போனேன்
திட்ட திட்ட பணிஞ்சு போனேன்..!

பசை போன்ற காவலனா
இல்லை வசை பாடும் காதலனா
என என்னிடம் நீ கேட்க...?

இரைச்சலோடு இருண்டு கிடக்கும்
உன் இதயத்திற்கு இன்னிசை மீட்டும்
இளைஞன் நான் என சொல்லியும்
என்னை தள்ளி வெச்சதேனடி...!

என் உச்சகட்ட கோவத்திலும்
உன் பச்ச புள்ள சிரிப்ப பார்த்து
சட்டுன்னு அதை மறந்திருந்தேன்..,

என் முழுவதுமாய் நீ இருக்க
எப்படி உன்ன மறந்திருப்பேன்..!

வானத்தை பூமி என்றாய்
பூமியை வான் என்றாய்
கதிரவனை கானல் என்றாய்,
கானலை காணோம் என்றாய்,

செவிகள் பேசும் என்றும்
உதடுகள் அழும் என்றும்
கண்கள் கேட்கும் என்றும்
கூசாமல் பொய் சொன்னாய்..,

சிலிர்த்தபடி சிரித்து நின்றேன்
முட்டாளாக நானும்..,

உண்மை அன்போடு காதல் கொள்ள
இந்த முட்டாள் தனம் வேணும்..!

நம் காதலுக்காக
என் தரம் நானே குறைத்த பின்னே..,
என் தாரமாக தவிர்த்து ஏன் என் கண்ணே..?

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (6-Aug-12, 4:43 pm)
பார்வை : 881

மேலே