அரியது கேட்கின்

அரியது கேட்கின் அன்புத்தோழா!
அரிது அரிது தமிழனாய்
பிறப்பது அரிது
தமிழனாய் பிறந்தாலும்
தரம் கெட்ட அரசியல் வாதிகளால்
இன்று நீ
தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து வாழ்வது
தமிழ் நாட்டில் மட்டுமல்ல
எல்லா நாட்டிலும் அரிது

கொடியது கேட்கின் கேளு தோழாய்!
கொடிது கொடிது கொலை கொடிது
அதனினும் கொடிது இனப்படுகொலை
அதனினும் கொடிது
அகதியாய் அலைவது
அதனினும் கொடிது
அன்பில்லாத் தலைவர்களின்
ஆறுதல் கொடியது
அவர் வாயால்
இன்புற உரைப்பது தானே

பெரியது கேட்கின் நெறிதவழ் தோழாய்
பெரிது பெரிது நம்பிக்கை பெரிது
இன்று நாம் வாடினாலும்
நாளை நாம் வாழுவோம்
நாளை இவ்வுலகம்
நம் பெருமையை சொல்லவும் பெரிதே!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (7-Aug-12, 3:09 pm)
பார்வை : 135

மேலே