புரிந்து கொள்கிறது..!

உறவுகளின்
இணைப்புத் தளம்!

வேண்டும் என்றாலும்..
வேண்டாம் என்றாலும்..
அழுகையோடுதான் இவர்களின்
அலைவரிசை ஆரம்பமாகிறது!

கசப்புகள் கனன்று.
துருவங்களாகிப் போன..
அப்பாவுக்கும்..தாத்தாவுக்கும் இடையே
இழைந்தோடும் அன்பு பாலம்!

அம்மாவுக்கும்..
பாட்டிக்கும் இடையே
போர் உருவாவதற்கும்..
நிறுத்தம் காண்பதற்கும்
காரணிகள் இவர்களே!

குழந்தைகளை..
நாம் புரிந்துகொள்ளும் முன்பே..
குழந்தைகள்
நம்மை புரிந்து வைத்திருக்கிறது!

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி ந (7-Aug-12, 11:47 am)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 267

மேலே