கருக்கலில் ஒரு புதுக்கவிதை
கருக்கலில்
சமைந்தும் சமையாத அந்த
இரவின் சறுக்கலில்
என்னென்னவோ
எண்ணவோட்டங்கள்
இல்லை இல்லை
எண்ண கிறுக்கல்கள்
ஏதோ ஒரு புதுக்கவிதை போல்
கருக்கலை போலவே
புரிந்தும் புரியாமலே
நம்மில் பலர் வாழும் வாழ்கையை போல்
வாழ்ந்தும் வாழாமலே
ஆ ஆங்!
விடிந்துவிட்டது
கிறுக்கலும் புரிந்துவிட்டது!
இதோ
அது ஒரு புதுக்கவிதையாக
"எதற்காக வாழ்கிறோம்
எதற்காக சாகிறோம்
என்று அறியாத
நம் வாழ்கையும்
ஒரு புரியாத புதுக்கவிதை"