வெற்றி நமதே சொல்லு தோழா !...
உலகம் உந்தன் கையில் தோழா
உறக்கம் வேண்டாம் எழுந்து வாடா
உழைப்பை நம்பி வாழும் தோழா
உயர்ந்து காட்டுவோம் எழுந்து வாடா
தோல்வியே நமக்கு சொந்தமில்லை
வெற்றி ஒரு நாள் கிடைக்கும் தோழா
தோல்வி அதனை எண்ணி நீயும்
முயற்சி எடுக்கா திருந்திடாதே
உண்மை என்றும் உயவு தருமே
உழைப்பு நமக்கு வாழ்வை தருமே
உள்ளம் அதனை வலிமையாக்கி
ஊக்கம் கொண்டு எழுந்து நில்லு
வெற்றி நமதே
சொல்லு தோழா !.....