ஏமாற்றங்கள் கண்டு...

ஏமாற்றங்கள் கண்டு, சிதைந்து விட்டது நெஞ்சு..
சுடு பட்டு, அடி பட்டு, ஆராய்ச்சியாலனின் கையில் தொல் பொருலாயிற்று..
நின்று நின்று துடித்தாலும், நினைவுகளை உள்வாங்கி,
ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது- கழற்றி எறிந்த கடிகாரம் போல..
வரும் துன்பம் ஓடிவிடுமென எண்ணியே எண்ண முடியாத அளவுக்கு தலையில் வெண்ணிற முடிகள்..
வாசுவண்டிச் சக்கரத்தில் பட்டுச் சிதைந்து போன தவளைபோல் ஆங்காங்கே முகத்தில் புன்னகை- மலை வந்தால் அதுவும் ஓடிவிடும்..
ஒரு ஓரமாய் உட்கார்ந்து சிந்தித்தாலும், துடுப்பாட்டப் பந்து வந்து என்மேல் விழுகிறது..
ஏமாற்றங்களின் எண்ணிக்கையால் கற்கள் வாங்க முடியுமாயிருப்பின், ஒரு மாளிகை கட்டி இருப்பேன்..
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்..ஏதோ!

எழுதியவர் : jiff (6-Oct-10, 11:32 am)
சேர்த்தது : jiff0777
பார்வை : 684

மேலே