மழைத்துளியாக மனதடியில்!
உருவானது மேகத்தில்
உருவானது மூளையில்!
சாரலாய்த் துவங்கியது
சிந்தனையாய்த் துவங்கியது!
மூளையும் மேகமாய் ஆனது
சாரலும் சிந்தனையாய் சிந்தியது!
சிந்திய சாரல்கள்
மூளையில் மேகமாக
சிந்தனை சாரல்கள்
மேகத்தின் மூலையிலே
பெருகிப் போனச்சிந்தனைகள்
ஆழ்கடல்,
ஆறாக ஓட!
சிந்திய சிந்தனைச்சாரல்கள்
மழைத்துளியாக
மனதடியில்!!!