தலை வா !

சூரிய னை புதைதுவிட்டு
விடியலுக்காய் ஏங்கி
தவிக்கிறான் ,
ஈழத் தமிழன் !
இறுதிகட்ட யுத்தத்தில்
என்ன நடந்ததுஎன்று
யூகிக்கமுடியும் என் தலைவா!
சிங்களவன்படை வளைத்துவிட்டது -என்
தோழனெல்லாம் கலைத்துவிட்டான்
உணவுஇல்லை ,ஒருசொட்டு உறக்கம்இல்லை
ஆயுதம்இல்லை , இருந்தாலும்
ஏந்திசெல்ல உடலில் வலுவும்இல்லை
காயம்பட்டவனுக்கு கட்டுபோடா
மருந்தும்இல்லை !
மக்கள் மரணத்தின் முன்
மன்றாடுவதை காண
உனக்கு மனமும்இல்லை !
எதிரிக்கு நீ வேண்டும் -அதுவரை
யுத்தம் ஓயபோவதும்இல்லை !
மண்காக்க,
மானம்காக்க,
உன் உடன்பிறப்பை காக்க ,
வெட்ரு துப்பாக்கியை
எதிரியைநோக்கி தூக்கிவிட்டாயே
என் தலைவா !

குண்டு வெடிப்பில்
இறந்தாய்என்கிறான் -ஒருவன்
கூன்டோ டு
ஓடிவிட்டாய் என்கிறான் -ஒருவன்
ஆயுதம் செய்த உனைவைத்து
அரசியல் செய்கிறான் எம் தமிழன்
குளம் காக்கும் மனம் படைத்தவன் -நீ
உன்னை கோழையாக்கி உன்
குல பெயரையே கெடுக்கிறான் -எம் தமிழன்

சாகபயந்தவன் தரித்திரம்
சாகதுநிந்தவன் சரித்திரம் !


நீதானே தலைவா
தமிழனின் சரித்திரம் !!!!!!!!!!!!!!!!







எழுதியவர் : thu.pa.saravanan (6-Oct-10, 5:00 pm)
சேர்த்தது : thu.pa.saravanan
பார்வை : 401

மேலே