தந்தை

நான் முயற்சித்த
முதல் தருணத்திலிருந்து
பல தோல்விகளை சந்தித்த பொழுது
அந்த தோல்விகளை வாங்கிக் கொண்டு
அடுத்த முயற்சிக்கு வாங்க வேண்டியதைப்
பற்றிக் கேட்ட என் தந்தையே...

உழைப்பால் உயர்ந்த உங்களால்
நான் உயர்ந்தேன் என நினைத்தால்
அந்த பெருமையே என்னை இன்றும்
உயர்த்திக்கொண்டிருக்கின்றது தந்தையே...

சிறு வயதில் என் பாதங்களை வருடிய
உங்கள் கரங்களை என்னிரு கரங்களினிடையில்
வைத்து உங்கள் வாழ் நாளை அதில் வாழச்
செய்வதே என் வாழ்நாள் விருப்பம் தந்தையே...

இந்த உலகெனும் கிறுக்கல்களில்
என்னை அழகான ஓவியமாக வரைந்த
என் தந்தை வாழ்க பல நூறாண்டுகள்...

எழுதியவர் : ம.அன்பழகன்... (14-Aug-12, 5:22 pm)
Tanglish : thanthai
பார்வை : 164

மேலே