வெற்றி கொடி கட்டு
நாளை சுதந்திர தினம்
நாலு சந்திலும்
தேசிய கொடி பறக்கும்
கைநிறைய மிட்டாய்கள்
வாய்நிறைய
சிரிப்பாய்
இருப்போம்
வந்தே மாதரம்
என்போம்
வாழ்க
தாய்த்திருநாடு
என உரக்க சொல்வோம்
வெள்ளையனிடம்
நாட்டை காப்பாற்றி
தேசிய கொடி ஏற்றும் நாம்
நாட்டின்
கொள்ளையனிடம்
இருந்து
விடுதலை பெற்று
வெற்றி கொடி
ஏற்றுவது எப்போது