எங்க ஊரைப் பாருங்க!
எங்க ஊரு திருனே(ல்)வேலி!
எடுத்து சொல்வேன் நானுங்க!
வந்து நீங்க பாருங்க,
வனப்பை கண்டு மகிழுங்க!
வாயைப் பிளந்து நின்னாக்க,
வாங்கி தருவோம் அல்வாங்க!
ஓங்கி உயர்ந்த கோபுரமாம்!
உள்ளே இருக்கும் நெல்லையப்பர்,
வாசல் மறிக்கும் பெரு நந்தி,
வணங்க வைக்கும் காந்திமதி,
வந்து பரவும் பொருநைநதி,
வளம் சேர்க்கும் ஊருங்க!
கோடு போட்டு வரைந்ததுபோல்,
குனிஞ்சு வளைந்த மலைத்தொடர்கள்,
ஏடு புரட்டி படிப்பதுபோல்
இலவம் பஞ்சு மேகங்களும்,
இங்கே வந்தால் பார்க்கலாம்,
இலவசமாய் ரசிக்கலாம்!
வரப்பு உயர்ந்த வயலுக்குள்,
வாளை மீன்கள் கொண்டாட்டம்,
வாளை மீன்கள் கொண்டாட
வாத்து கூட்டம் திண்டாடும்!
சிறப்பை சொல்லும் சிற்பங்கள்!
சிந்தை சிலிர்க்க வைக்குந்தான்!
பாப நாசம் வந்தாலே,
"பாப நாசம்" ஆகுந்த்தான்!
குளிக்க உண்டு குட்ட்றாலம்,
குளிர்ச்சி காணும் உடலுந்த்தான்!
குரங்கைக் கண்டு மகிழ்ந்திடலாம்,
குதிச்சு ஆட்டம் போட்டிடலாம்!
யெம் பாட்டைக் கேளுங்க,
எங்க ஊரை பாருங்க!
கள்ளம் இல்லா உள்ளங்கள்,
கடும் உழைப்பின் சொந்தங்கள்,
பார்த்த பின்னே நீங்களுந்தான்
பாடி...ஆடி.. வாழுங்கோ!