நாகரிகத்தின் முதுகெலும்பாய் நமது கிராமங்கள்.....

வயல் வெளிகள் தோறும் விவசாயம் உண்டு....
வஞ்சக இல்லாத உழைப்பும் உண்டு........

திண்ணை வைத்த வீடும் உண்டு.....
திமிரிலாத பேச்சும் உண்டு........

திறந்த வெளி குளியலும் உண்டு.....
விரசமில்லாத விழிகளும் உண்டு.......

ஆழும் வேலும் பல்லுக்கு உண்டு........
அன்னை கைபட்ட கூலும் உண்டு.......

அறுவைசிகிச்சை இல்லாத பிரசவம் உண்டு....
அனைத்து குழந்தைக்கும் தாய் பாலும் உண்டு.....

வீர தீர விளையாட்டுகளும் உண்டு....
வேதியல் கலக்காத மருத்துவம் உண்டு....

உடற்பயிற்சி இல்லாத உழைப்பும் உண்டு......
உண்ணும் உணவிலும் இயற்கையும் உண்டு...

அலங்காரமில்லாத அழகிகள் உண்டு.........
அசைக்க முடியாத காதலும் உண்டு...........

சுவாசத்தை கெடுக்காத சுத்த காற்றும் உண்டு.....
சுற்று மட்டும் சொந்தங்களே உண்டு....

தாவணி போடும் தாரகைகளும் உண்டு....
வெட்கம் கலந்த புன்னகைகள் உண்டு......

பந்தங்களோடு சேர்த்து பஞ்சாரத்து
கோழியும் உண்டு............
நண்பர்களில் ஒருவனாக நாயும் உண்டு..........


தேன்நிலவு காணத தம்பதிகளும் உண்டு.........
நீதிமன்றம் நெருங்காத தாம்பத்தியம் உண்டு.....

ஊர் கூடித் திருவிழாவும் உண்டு....
ஊரில் எவர் இறந்தாலும் எல்லார்
கண்ணிலும் கண்ணீர் உண்டு......

தடம் பிறலாத நாக்கும் உண்டு.........
மனம் தளராத மனித நேயமும் உண்டு.........

...........என்றும் அன்புடன் சத்யா.....

எழுதியவர் : (17-Aug-12, 3:06 am)
சேர்த்தது : sathiyan
பார்வை : 154

மேலே