என் வீட்டுசுவரிலும் சில கல்வெட்டுகள்.........

முறிக்கிவிட்ட மீசையும்
முற்போக்கு சிந்தனையுமாய் ...புன்முறுவல்
பூத்தபடி என் முப்பாட்டனும் ஒரு காட்சியில்......

காது ரெண்டில் தண்டையும்
கண்டாங்கி சேலையும் மாய்....புதுமஞ்சள்
பூசியபடி என் முப்பாட்டியும் ஒரு காட்சியில்...

முகம் நிறைந்த பெருமையும்
மூத்தகுடி பார்வையுமாய் ....அமைதியான
வடிவில் என் அய்யாவும் ஒரு காட்சில்....

நெற்றி நிறைந்த பொட்டும்
நேர்கொண்டபார்வையுமாய்...
அழகியபுன்னகையுடன் ...
என் அப்பத்தாவும் ஒரு காட்சியில்........

ஏற்றி விட்ட சீவலும்
தூக்கிவிட காலருமாய் ..அலட்டலான...
தோற்றத்துடன் என் அப்பாவும் ஒருகாட்சியில் .

தாழம்பூ கொண்டையும் ..
தலை நிறைந்த மல்லிகையும் ....
தரை பார்த்த பார்வையுடன் என்அம்மாவும்......
ஒருகாட்சியில்..
விலகிவிட்ட சொந்தங்களும்
சிதறிவிட்ட உறவுகளும் சின்ன சின்ன
புன்னகையுடன் சேர்ந்திருந்தனர் ஒருகாட்சியில்..

சொல்லி கொடுத்த ஆசானும்
துள்ளி விளையாடிய நண்பர்களும்
அமர்திருந்தினர் ஒரு காட்சியில்.........

இந்த காட்சிகள் எல்லாம் கல்வெட்டாய் ...
பொறிக்கப்படிருன்தனர் என் வீட்டின் சுவரில்
புகைப்படம் என்கிற பொக்கிசமாய்.....

.......என்றும் அன்புடன் சத்யா............

எழுதியவர் : (17-Aug-12, 2:07 am)
சேர்த்தது : sathiyan
பார்வை : 144

மேலே