எங்கே நீ சென்றாயோ ...

என் உயிருடன் உயிர் கலந்தாய் ...
என் கண்களின் தழுவுகின்றாய் ...
மூச்சுடன் வாழுகின்றாய் ...
எங்கே நீ சென்றாயோ ...

உன்நினைவும் என்னைதான்
முள்ளாய் குத்துகிறதே... நான்
காணும் பொருள் எல்லாம்
உன் பூ முகம் தெரிகின்றதே . . .
எங்கே நீ சென்றாயோ ...

உன் நிலையும் தெரியவில்லை ...
என் நிலையும் புரியவில்லை ...
அந்த காற்றிடம் தூது சொன்னேன் ...
உன் காதினில் சொல்லிவிட்டதா ?
எங்கே நீ சென்றாயோ ...

அலை கடல் ஓசையிலே காதலை - என்
உரைதேன் அது காற்றினில் கலந்தது போல்
என் காதலை மறந்தாயோ ...
எங்கே நீ சென்றாயோ ...

உன் காதலும் பொய்தானா?
வெறும் கானல் நீர் தானா ?
எங்கே நீ சென்றாயோ ...

எழுதியவர் : ஜெயதேவி (17-Aug-12, 8:52 am)
பார்வை : 329

மேலே