ஆசை
தான் விரும்பிய பெண்ணிடம் தன் காதலை சொல்லி,அவளும் அதை ஏற்றுக்கொண்டு அவளையே திருமணம் செய்கிறான் இந்த இளைஞன்.விதி வசத்தால் ஒரு விபத்தில் அவன் கண் எதிரே இறந்து போகிறாள் அவன் மனைவி.அந்த சோகத்தில் அவன் அவளிடம் சொல்ல விரும்பும் வரிகள்
என் வீட்டில் விளக்கேற்ற நீ வர வேண்டும்
உன்னை நினைத்து உருகும் என்னை திரும்ப தரவேண்டும்
வேண்டியதேல்லாம் உன்னோடு வாழ ஒரு வாழ்வை
அந்த வரத்தை எனக்களிப்பாளா இந்த பாவை?
கை சேர்த்து கொண்டாடினோம்;
வாழ்வை உல்லாசமாக விளையாடினோம்.
என் கண் முன்னே உதிரம் ஓடியது
என் உயிரும் உன்னோடு வர நாடியது
என் நினைவாய் நின்றவளே
இன்று ஏனோ கனவாய் போனாளே
இனி எத்தனை நாளோ இந்தப் பாலைவனம் எனக்கு?
என்னை விட்டு சென்று அந்த சொர்கமும் சோலை ஆனதோ உனக்கு?
நினைவிருக்கும் வரை உன்னை மட்டுமே நினைத்திருப்பேன்
மறந்திருந்தால் மண்ணோடு புதைந்திருபேன்...