நகரங்கள் கிராமங்களாக !

மரத்தடி திண்ணைகளில்
தாத்தாக்களின் மாநாடு !
கிணற்றடி முன்றலில்
குமரிகளின் கொக்கரிப்பு !
பனையோலை விசிறிகள்
பரபரப்பாய் கடமையில் !
சுட்டி பையன்களின்
கிட்டி விளையாட்டு !
பல்லிழிக்கும் பாப்பாக்கள்
பல்லாங்குழி விளையாட்டில் !
குயிலோடு குருவிகளின்
குரல் தேர்வு காதுக்குள் !
____________
மின்வெட்டு