ஊமைக் கவிஞன்

என் காதல் பெண்ணை
எப்படி வர்ணிப்பேன்

நிலா என்று....
அது தேய்ந்து அல்லவா போகும்

மலர் என்று....
அது உதிர்ந்து அல்லவா போகும்

முகில் என்று....
அது கலைந்து அல்லவா போகும்

பனித்துளி என்று....
அது மறைந்து அல்லவா போகும்

குயில் என்று....
அது முகம் மறைத்து அல்லவா போகும்

தவிக்கிறேன் இந்த ஊமைக் கவிஞன்
உன்னை வர்ணிக்கும் வார்த்தை சொல்ல....




எழுதியவர் : க(வி)நேசன் (7-Oct-10, 9:52 pm)
பார்வை : 439

மேலே