நேற்று காதலி இன்று சுமங்கலி

அழகான காலையில்
இதமான மழைசாரல் தூரலில்
அவளோடு வாழ்ந்த வாழ்க்கையை
கனவோடு கடந்து செல்கிறேன்....

மழையை தடுக்க குடையில்லாமல்,
அவளை மறக்க வழில்லாமல்
ஒரு தலை காதலுடன்
திரிந்து கொண்டிருக்கிறேன்...

உன்னை முதன் முதலில் பார்த்த
என் இரு விழி பார்வைக்கு
மறையாத முழு நிலவாய்
தெரிந்தாய்

உன்னோடு நான்
முதன்முதலில் பேசிய வார்த்தைக்கு
புரியாத விடுகதையாய் அமைந்தாய்....

காலம்- நேரம் என்னை
அறியாமல் கடந்து விட்டது
உன்னோடு பேசிய
சில நாட்களில்....

இலட்சியங்கள் என்னுள் வேகமாக
துடிக்க ஆரம்பித்து விட்டது
உன்னோடு வழ நினைத்த
சில நாட்களில்....

நீ எனக்காக பிறந்தவள்
போல் உணர்ந்தேன் பல இரவுகள்
எனக்காக காத்திருப்பதை பார்த்து ..

நான் எதுவும் இல்லாத ஏழை
என்று உணர்ந்தேன் - உன் வீட்டில்
நீ இருக்கும் அழகை பார்த்து..

உன்னோடு நடந்து சென்ற
சில நாட்கள் மறக்க முடியாத
நினைவுகள் ஆகிவிட்டது...

உன் முகத்தையே பார்த்து
கொண்டிருத்த என் கண்கள்
விடாமல் அழ தொடங்கி விட்டது...

என்றோ ஒரு நாள் சாதிப்பேன்
உன் விட்டில் பெண் எடுப்பேன்
என்ற ஆசை எல்லாம் இன்றோடு
முடிவடைகிறது...

நேற்று என் காதலியாய் இருந்தவள்
இன்று சுமங்கலி ஆக போகிறாள்
வேறொரு உறவுகளோடும்
புது புது சொந்தங்கலோடும்
இப்படிக்கு அவளின் நினைவுகளோடு
மணி...

எழுதியவர் : மணிமாறன் (25-Aug-12, 2:43 pm)
பார்வை : 389

மேலே