வறுமையே பால் வார்க்கும்
சொட்
சொட்
சொட்
சொட்
ஓலைக் குடிசைக்குள்
ஒழுகிக் கொண்டிருந்தது மழை......
பித்தளைப் பாத்திரத்தில் எல்லாம்
பிடித்தாகி விட்டது மழைத்தண்ணீரை......!
நில அதிர்வோ என அச்சப்பட்டு
நிழலுக்குள் விழி மங்கிப் பார்த்தேன்....
அதிர்ந்து அசைந்து கொண்டிருந்தது
பசியால் பட்டினி கிடந்த என் வயிற்றின் மேல்
பாத்திரம் என்று நினைத்து
விழுந்து கொண்டிருந்தது மழை......
சொட்
சொட்
சொட்
சொட்