உதிராத உள்ளன்பு...
அழகான இரவோடு...
நிலவும் மறைந்திடும்
என்று நினைக்கவில்லை...
கண்களைக் கவர்ந்தக் காலையில்....
நிலவைக், காணோம் என்று
வருந்தாமல் இருக்கவில்லை....
நெஞ்சைக் கருக்கும்...
ஆதவனை எனக்கு
இங்கேப் பிடிக்கவில்லை....
மயக்கமான மாலையிலும்...
கவலைபோக்க மதுவை
நான் தேடவில்லை....
மீண்டும் ஓர் இரவில்...
வந்த நிலவை...
நான் வெறுக்கவில்லை....
கரணம் கேட்டால்
என்ன சொல்வதென்று
எனக்கு தெரியவில்லை...
காயம் பட்டாலும்...
நல்ல இதயம்
யாரையும் வெறுப்பதில்லை....