நீந்த தெரியாத மீன் குஞ்சுகள் !
யாரு திருவள்ளுவரா !
ஐயா வணக்கம்
திருவள்ளுவரை அறியாத தலைமுறை
எங்கள் தலைமுறை
ஐயா நீங்கள் தாடியை எடுத்துவிட்டால்
எங்கள் இலக்கியவாதிகளுக்கே
உங்களை அடையாலம் தெரியாது
உங்கள் தாடிதான் உங்கள் அடையாலம்
ஐயா !
வேண்டும் மீண்டும் ஒரு திருக்குறள்
எழிய நடையில் ....
அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து
முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதுங்கள்
தமிழ் தெரியாத தமிழர்கள் நாங்கள் !
நீந்த தெரியாத மீன் குஞ்சுகள் !