கல்யாண கனவு

மடிப்பு கலையாமல் பட்டு உடுத்தி
கூந்தலின் நீலத்தினும் நீளமாய் பூ சொரிந்து
நெற்றியிலே சென்னிரப்பொட்டு இட்டு
அழகு பதுமையாய் நின்ற
மணபெண்ணின் கண்ணத்தில்
வைத்தால் சின்னதாக அம்மா
ஒரு திசிடிபொட்டை
தேவதையாட்டம் இருக்கா பொண்ணு
என்று மணப்பெண்ணை பார்த்தவர்கள்
சொல்லி மாளவில்லை
தங்க நிற பொண்ணுக்கு தங்கம் எதுக்கு
என்றால் பெற்றவள் பெருமையாக
தங்கம் இல்லாமலா கல்யாணம்
என்று கலந்து உரையாடயிலே
முக்கிய செய்திகள் தங்கம் ஒரு கிராமுக்கு
304 அதிகரித்து இன்று 3078 விற்பனையாகிறது
என்றது தொலக்காட்சி பெட்டியின் குரல்
அந்த குரல் என்னை கண் விழிக்க செய்தது
கல்யாண கனவும் கலைந்தது