சுயம்
முட்கள் இருப்பதால்தான் ரோஜா
அழகாக தெரிகின்றதா?
கடின தோலை பெற்றிருப்பதால்தான் பலா
சுவை விரும்பபடுகிறதா?
கருப்பாக இருப்பதால்தான் குயிலின்
குரல் அறியபடுகிறதா?
இல்லை எல்லாம் அவற்றின்
தனி தன்மையால் அல்லவா?
மனிதா உன் சுயத்தை
உணர்த்து நீயும் நின்று விடு
உன் சுயத்தால் நீயும்
பேச படுவாய் பிறரால்
உன் சுயம் அறியும் போது
உன்னில் மறைத்திடும் உன்
எதிர் அலைகள்